தர்பைப் புல்
தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. தர்பை, குளிர்தன்மையைக் கொண்ட தாவரம். உடல், சூடு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க இது உதவுகிறது.
அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை உள்ள இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டுக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் தரப்பைப் புல்லைக் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் பிரச்னைகள் சரியாகும் சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த நீர் நல்ல பலன் தரும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.
நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்ற உணவு பொருட்களில் சில துண்டு தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும்.
0
Leave a Reply