டென்மார்க் ஓபன் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய காயத்ரி–திரீசா ஜோடி.
டென்மார்க்கில் நடைபெற்று வரும் 'சூப்பர் 750' அந்தஸ்து கொண்ட சர்வதேச பாட்மின்டன் தொடரில், இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்–திரீசா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் பிரிவு சுற்று 16 போட்டியில் இந்திய ஜோடி, இந்தோனேஷியாவின் அலெஸ்யா ரோஸ்–பெபி செடியானிங்ரம் ஜோடியை எதிர்கொண்டது. 45 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய காயத்ரி–திரீசா ஜோடி, 21–16, 21–17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21–11, 15–21, 15–21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா, ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 18–21, 10–21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
0
Leave a Reply