டென்மார்க் ஓபன் பாட்மின்டன்: சிந்து, லக்சயாவுக்கு கடும் சவால்.
டென்மார்க்கில் ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, நடப்பு சாம்பியனும் உலகின் முதல்நிலை வீராங்கனையுமான தென்கொரியாவின் ஆன் சே-யங்கை எதிர்கொள்கிறார். தென்கொரிய வீராங்கனைக்கு எதிராக கடைசியாக விளையாடிய 10 போட்டிகளிலும் சிந்து தோல்வியடைந்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் தான்வி சர்மா, அஷ்மிதா, தேவிகா சிகாக், உன்னதி ஹூடா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் மூன்றாம் நிலை வீரரான சீனதைபேயின் சோ டியென் செனை சந்திக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடியும், காயத்ரி கோபிசந்த் - திரீசா ஜோடியும் பங்கேற்கின்றன.
0
Leave a Reply