முதுமையில் வரும் பல் நோய்கள்.
புதியகுறிக்கோளைஅமைத்துக்கொள்ளவும்புதியகனவுகளைக்காணவும்எப்போதும்வயதுஒருதடைஇல்லை.ரசிக்கப்படாத இன்னொரு குழந்தைப் பருவம் முதுமை. அத்தகைய முதுமைப் பருவத்தை ரசனையோடு வாழப் பழகிக்கொள்வதே. முதுமைப் பருவத்தின் வெற்றி ஆகும். எப்போது ஒரு மனிதன் நோயின்றி இருக்கிறானோ, அப்போதுதான் தன்னம்பிக்கை வளரும்.முதுமையில் வரும் பலவிதமான நோய்களை இளமையில் நம் உடலைப் பேணுவதன் மூலம் வெல்லலாம். வயதின் மாற்றங்கள் பற்களையும், ஈறுகளையும் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
முதுமையில் வரும் பல் நோய்கள் பல் தேய்மானம்,பற்குழி,ஈறுநோய்,பற்கள் காணாமல் போதல்,வறண்ட வாய், முதலியன நாம் பொதுவாகப் பார்க்கக்கூடிய பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களாகும். அதிலும் குழியினாலோ, ஈறு பிடிமானம் இல்லாமல் போனதினாலோ நாம் நமது பற்களை இழக்க நேரிட்டால் அதனால் வரும் பாதிப்புகள் மனதளவிலும், உடலளவிலும் ஏராளம்.நவீனச் சிகிச்சை முறையில், இழந்த பற்களை மீண்டும் செயற்கையாகம் பொருத்திச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் முறையே “பல் உள்வைப்புகள்' ஆகும்.(Dental Implants). இது இழந்த பற்களின் வேர்ப் பகுதிக்குள் அமைத்துச்செயல்படும்.இச்சிகிச்சை தன்னம்பிக்கையை மேம்படுத்தும். வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.
0
Leave a Reply