பாராலிம்பிக்கில் இந்திய 25 பதக்கங்களை வெல்லும் என தேவந்திர ஐஜாரியா தெவிரித்தார்.
பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கவுள்ளது. 22 விளையாட்டில் 549 பிரிவுகளில் போட்டி நடக்க உள்ளன. இந்தியா சார்பில் 84 பேர் 12 போட்டிகளில் களமிறங்க காத்திருக்கின்றனர். கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் 54 பேர் பங்கேற்க. இந்தியா 19 பதக்கம் வசப்படுத்தியது.
பாரிஸ் போட்டி குறித்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி BCI தலைவர் தேவேந்திர ஐஜாரியா வயது 43 கூறியது. பிரமோத் பகத் பாட்மின்டன், நமது நட்சத்திர வீரர் இம்முறை தடை காரணமாக துரதிருஷ்டவசமாக இந்திய அணயில் இடம் பெறாதது சோகம். பிரமோத் இல்லை என்றாலும், குறைந்தது 25 பதக்கம் வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். நமது நட்சத்திரங்கள் பாராலிம்பிக் போட்டிக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளனர். 25 பதக்கம் கைப்பற்றி, டாப் 20 இடத்துக்குள் வர திட்டமிட்டு உள்ளோம். நிர்ணயிக்கப்பட்டதை விட, இந்தியா இன்னும் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் ,என இலக்கு வைத்துள்ளோம். தடகளத்தில் மட்டும் இந்தியா சார்பில் 28 பேர் களமிறங்குவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
0
Leave a Reply