மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருது 2021-2022
விருதுநகர் மாவட்டத்தில் நேரு யுவ கேந்திரா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர்,மகளிர் மன்ற விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் சிறப்பாக செயல்பட்ட இளைஞர்,மகளிர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
தகுதி:
மாவட்டஅளவிலானசிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருது(ஒன்று):
1. நேரு யுவ கேந்திராவிலும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்து இருக்க வேண்டும.
2. மேலும் பதிவு செய்த மன்றங்கள் 2021-2022-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்கினை தணிக்கை செய்திருத்தல் அவசியம்.
3. 01-04-2021 முதல் 31-03-2022 வரை சிறப்பாக பணியாற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்
4. ரூ.25000/- ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
5. இதில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான இளையோர் மன்ற விருதுக்கு தேர்வுசெய்து அனுப்பப்படும்.
விருது பெறத் தகுதியுள்ள மன்றங்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை 15.12.2022-ம் தேதிக்குள் மாவட்ட நேரு யுவ கேந்திராஇகுமாரசாமி ராஜாநகர், மகளிர் காவல் நிலையம் அருகில், விருதுநகர் - 626 002 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்பிக்கும் படி, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
0
Leave a Reply