வாட்ஸ்அப் இல் இந்த தவறை செய்தால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பிளாக் செய்யப்படும்
வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சத்தின் படி, நீங்கள் பிறருக்கு அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும். மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்தால் கூட, வாட்ஸ் அப் உங்களை அனுமதிக்காது. பல நேரங்களில் பாதுகாப்பு சிக்கலில் சிக்கியதால் இப்போது நிறுவனம் அதன் பயனர்களுக்கான பிரைவசி பாதுகாப்பு, நடவடிக்கையை வலுப்படுத்தி வருகிறது
இது வரை வாட்ஸ்அப் இல் அனுப்பப்படும் ,வியூ ஒன்ஸ் மெசேஜ்களை பெறுநர்கள், ஒரு முறை மட்டுமே பார்க்க முடிந்தது. இருப்பினும், இதில் உள்ள தகவல்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க, வாட்ஸ்அப் அனுமதித்திருந்தது. சிலர் வியூ ஒன்ஸ் மெசேஜ் தகவலை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்தும், பதிவும் செய்ததால் இது பாதுகாப்பு சிக்கலை மோசமாக்கியது.இதன்படி, இனி எந்த வாட்ஸ்அப் பயனர்களும் வியு ஒன்ஸ் மெசேஜ்களை , ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அல்லது ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யவோ முடியாது என்று முக்கியமான விதியாகவே அறிவித்துள்ளது.
எடுக்கும் பட்சத்தில் வாட்ஸ் அப் உங்களுக்கு கிரே நிற பாப் அப் எச்சரிக்கை மெசேஜை அனுப்பும். மீறி எடுக்கும் பட்சத்தில் வாட்ஸ் அப் உங்களுக்கு, கிரே நிற பாப் அப் பிரைவசி, விதியை மீறி விட்டீர்கள் என எச்சரிக்கை மெசேஜை அனுப்பும். நீங்கள் தவறாக பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முற்றிலுமாக முடக்கப்படும்.
வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஷேர் செய்யவும் முடியாது. அதேபோல் இனி பயனர்கள் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஷேர் செய்யவும் , பகிரவும் முடியாது. வாட்ஸ்அப் இனி பிரைவசி கண்ட்ரோலை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் பற்றிய விபரங்களை அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள்.
0
Leave a Reply