ATM செல்ல வேண்டாம்.. ரூ.50,000 வரை வீட்டுக்கே தேடி வரும்.
வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும்நமது தினசரி வாழ்க்கைக்குமத்தியில், வங்கி(Bank) சென்றோஅல்லது ஏடிஎம்(ATM) சென்றோபணம் எடுக்க நேரம் இல்லாத ஆதார் அட்டை(Aadhaarcard) பயனர்களுக்கு, வீடு தேடி வந்து பணத்தைஒப்படைக்கும் புதிய சேவையைஆதார் மற்றும் இந்தியஅரசாங்கம்(GovernmentofIndia) இணைத்துஉருவாக்கியுள்ளது.இந்த சேவை தற்போதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உங்களிடம்ஆதார் மட்டும் இருந்தால்போதும், ரூ.50,000 வரைஉங்கள் வீட்டுக்கே தேடி வந்து பணம் வழங்கப்படும் புதிய சேவையை இந்தியஅரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவை ஆதார் எனப்பில்டு பேமெண்ட்சிஸ்டம்(AadhaarEnabledPaymentSystem) அல்லதுஏஇபிஎஸ்(AePS)என்ற பெயரின் மூலம் பொதுமக்களுக்காக செயல்படுகிறது. AePS என்பது NPCI என்றஇந்திய தேசிய கொடுப்பனவுகழகம் (National Payments Corporation ofIndia) மூலம்உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பாகும். இது ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள்வங்கிக் கணக்கில் பணத்தைடெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் அனுமதிக்கிறது.இதுமட்டுமின்றி, வங்கி கணக்குஇருப்பைச்(bankbalancestatus) சரிபார்க்கவும்மற்றும் ஆதாரில் இருந்துஆதாருக்கு நிதியை மாற்றவும்(AadhaartoAadhaarmoneyexchange) உதவுகிறது.பணம் எடுக்கவும்(Cashwithdrawl), பணம் டெபாசிட் (Cash deposti) செய்யவும்நீங்கள் வங்கிகோ, அல்லதுஏடிஎம் மையத்திற்கோ (ATM center) அல்லது டெபாசிட்இயந்திரத்தை (Deposit machine) தேடியோஅலையவேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.இந்த புதிய சேவை இந்தியா போஸ்ட்பேமெண்ட் வங்கி (Indiapostpaymentbank) உடன் இணைந்துசெயல்படுகிறது. இந்த சேவையின்மூலம் உங்கள் ஆதார் விபரங்களுடன் இணைக்கப்பட்டவங்கி கணக்கில் இருந்துரொக்கமாக பணத்தை உங்கள்வீடு தேடிய வரவழைக்கமுடியும். இந்த பணத்தைஉங்கள் ஏரியாவின் போஸ்ட்மேன்உங்கள் வீடு தேடி வந்து ஒப்படைப்பார். இந்த சேவை உங்களுக்கு 6 வகையான வங்கி சேவையைவழங்குகிறது.
ஏடிஎம் மற்றும்வங்கி செல்லாமல் வங்கி தொடர்பான சேவைகளைஅணுக அனுமதிக்கிறது. இந்தAePS சேவையைபயன்படுத்த முதலில் உங்கள்வங்கி கணக்குடன் உங்கள்பயோமெட்ரிக் விபரங்கள் மற்றும்ஆதார் விபரங்கள் இணைக்கப்படவேண்டும். உங்களிடம் ஒன்றிற்கும்மேற்பட்ட வங்கி கணக்குகள்இருக்கிறது என்றால், அதில் எது உங்கள்பிரைமரி வங்கி கணக்காகசெயல்படுகிறதோ. அந்த கணக்குமட்டுமேAePS சேவைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.AePS சேவை மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றத்திற்கு(Moneytransactions) இந்தியரிசர்வ் வங்கி (RBI) எந்தவிதகட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.இருப்பினும் சில வங்கிகள் (banks) ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை மட்டுமே பணபரிமாற்றத்தைவழங்க அனுமதிக்கிறது.
- போஸ்ட்மேன்னிடம்இருக்கும் POS மெஷினில் உங்கள்ஆதார் விபரங்களை உள்ளிட்டவேண்டும். - பரிவர்த்தனை வகையைத்தேர்ந்தெடுக்கவும். - வங்கியின் பெயரைக் குறிப்பிடவும். - பரிவர்த்தனையைத் தொடர பரிவர்த்தனைதொகையை உள்ளிடவும். - கட்டணத்தை உறுதிப்படுத்தபயோமெட்ரிக் அங்கீகாரத்தை வழங்கவும். - பயோமெட்ரிக் என்பது உங்கள்கைரேகை அல்லது கருவிழிஸ்கேன்னிங் ஆகும். - பணத்துடன்பரிவர்த்தனைக்கான ரசீது வழங்கப்படும்.
0
Leave a Reply