குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன காலிப் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.
குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவாராக இருத்தல் வேண்டும்.
(அல்லது)
குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளிலிருந்து, விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையத்தள முகவரியிலிருந்து (https://dsdcpimms.tn.gov.in) விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள்) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010. என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply