பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்க......
வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து, அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால், பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
பாகற்காய் வதக்கல் செய்யும்போது அதில் தேங்காயைப் பல் பல்லாகக் கீறி எண்ணையில் வதக்குங்கள்., தேங்காயுடன் பாகற்காயை சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருப்பதுடன் கசப்பும் தெரியாது.
0
Leave a Reply