25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முருங்கை கீரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முருங்கை கீரை.

முருங்கை கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது நிற்கும். இளநரை, மலச்சிக்கலை போக்கும். பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வலி இருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு குடித்தால் வலி நீங்கும்.

கருவுற்றோர் வாரம் ஒருமுறை முருங்கை கீரை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை மற்றும் பாத வீக்கத்தை தடுக்கும். கீரையை சாறாக எடுத்து பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் சுலபமாக நடக்கும்.

துவரம் பருப்பு சேர்த்த முருங்கை கீரை பொரியலை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதில் உள்ள கால்சியம் தாயின் உடல் பருமனாகாமல் பார்த்துக் கொள்ளும்.

முருங்கை கீரையால் சமைத்த உணவை 3 மாதங்கள் உட் கொண்டு வந்தால் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. ரத்த சோகையை போக்கும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண் டது.

இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவுகிறது. முருங்கை கீரையோடு 2 துண்டு பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்து செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும்.

முருங்கை சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கரைத்து ½சங்கு அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று உப்புசம் நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News