குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் கடமை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசக் கூடாது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள். நண்பர்கள் முன் மட்டம் தட்டிப் பேசுவது, அடிப்பது கூடவே கூடாது.
பொண்ணு எப்படிப் படிக்கிறா?, 'பையன் சேட்டை பண்ணுவானா?' என்று கேட்டால், 'அதை ஏன் கேட்கிறீங்க' என்று கூறாமல், 'நன்றாகப் படிக்கிறாள்/பொறுப்பாக இருக்கிறான். வளர வளர நிறைய மாற்றத்தை உணர்கிறோம்' என்று உயர்வாகப் பேசி குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் சோகமாக இருக்கும்போது ஒரு நண்பன் போல பேசி, பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வு காணவேண்டும் உங்கள் யூகங்களை அங்கே நிரப்பி அவர்களை இன்னும் தனிமையில் தள்ளக்கூடாது.
குழந்தைகள் தினம் பள்ளி விட்டு வந்தவுடன் நண்பர்கள், பாடம், வகுப்பு, ஆசிரியர் என பள்ளியில் நடந்த விஷயங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை குழந்தைகள் முன் விவாதிப்பது சண்டை போடுவதை அறவே தவிர்க்க வேண்டும்
'என் அப்பா, அம்மாதான் உயர்ந்தவர்கள்.என் வீடு ரொம்ப சந்தோஷமான வீடு' என்று மகிழும், கொண்டாடும் பால்யத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது, பெற்றோரின் கடமை!
0
Leave a Reply