கத்தரிக்காய் சாதம் பொடி.
தேவையான பொருட்கள் - பிஞ்சு கத்தரிக்காய் 10 முதல் 12 வரை, பெங்களுர் தக்காளி 2 பெரியது, தனியா 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், வத்தல் 4 முதல் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன், பட்டை 2 இஞ்ச், தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு.
செய்முறை:- பலசரக்கு அனைத்தையும் வெறும் வாணலியில் நன்றாக வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து வதக்கியதும், கத்தரிக்காயை நீளவாக்கில் நைஸாக வெட்டி, உப்பு சேர்த்து வதக்கவும், அரை வேக்காடு வெந்தவுடன் இப் பொடியை சேர்த்து நன்றாக வெந்ததும் சாதத்தில் கலந்து பரிமாறவும்.
0
Leave a Reply