பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவி தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றியபோது “பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்”என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் – 13, நாள் – 12.02.2025-ன்படி ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பு நாளேடுகளில் வெளியானதைத் தொடர்ந்து இத்திட்டம் குறித்தான பயனாளர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் கீழ்கண்டவாறு விளக்கங்கள் தெரிவிக்கப்படுகிறது.
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் குழந்தைகளில்10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ, 4,000/-ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குரூ, 6,000/-ம், ஆகிய ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் பணப்பலனை பெறவும், பட்டாசு தொழிற்சாலை விபத்தில் தாய் தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.2,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) தாய் தந்தை இருவரும் மரணமடைந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.4,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) பெறவும் 10.11.2024க்கு முன் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10.11.2024 அன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் 10.11.2024க்கு பிந்தைய விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் விபத்து நிகழ்ந்த நாளன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவி தொகை பெறமேற்குறிப்பிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு அரசுக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்10.11.2024 அன்றைய தேதியில் உயர் கல்வி பயிலும் மற்றும் 10.11.2024க்கு பிறகு உயர் கல்வியில் சேரும் குழந்தைகள் எவரேனும் இருந்தால் விண்ணப்பிக்கலாம். .
மேற்குறிப்பிட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஏதுவாக இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின் பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம், தொடர்பு அலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “ இணை இயக்குநர், தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம். கதவு எண்- 4,NSPN ஆறுமுகநாடார் ரோடு, தங்கம் மகால் முதல் தளம், சிவகாசி - 626 123. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும்படியும்,
மேலும் விண்ணப்பத்துடன் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விண்ணப்பிக்கும் குழந்தைகளின் பிறந்த தேதி ஆதாரமாக பிறப்புச்சான்றிதழ் அல்லது கல்வி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்பும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இது பற்றி கூடுதல் விவரங்கள் அறிய 9865958876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447 45064 (இணை இயக்குநர், சிவகாசி) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply