25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த தகுதியான மாணாக்கர்கள் இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த தகுதியான மாணாக்கர்கள் இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மூலமாக டி.சி.எஸ்அயன் ((TCS iON)  மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Med Skills)   நிறுவனம் இணைந்து இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள் மற்றும் நர்சிங்கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 6 வாரகாலம் இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.29,500 ஆகும்.
 

இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணையவழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, காரைக்குடி, வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.  பயிற்சி காலங்களில் மாணாக்கர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமணைகளிலும் அதனுடன் தொடர்புடைய முன்னனி மருத்துவ மணைகளிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.மாணாக்கர்களின் திறமைக்கேற்றவாறு வெளிநாடுகளில் உள்ள மருத்துவமணைகளிலும் சென்று பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.இப்பயிற்சியினை பெற 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள்அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்துவரும் 20 முதல் 28 வயது வரையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.
 

மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம்’வழியாக நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணாக்கர்கள் FINE(Finishing Skills for Nursing Excellence)  எனப்படும் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள். இப்பயிற்சியினை www.tahdco.com  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணமும் வழங்கப்படும். எனவே உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News