சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகள்(சாலை வசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், மின்சார வசதி தொலைதொடர்பு வசதி போன்றவைகள்), பொது வசதிகள்(ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம் குழந்தைகள் காப்பகம் உணவகம் மற்றும் இதர இனங்கள்) மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
மேற்படி திட்டம் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் மதுரை மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், 34-விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை-625 014, தொலைபேசி எண் 0452- 2530020 மற்றும் 96595 32005 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply