வெந்தயம்,சுண்டைக்காய் ,மணத்தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்- வெங்காயம் 200 கிராம், புளி நெல்லிக்காயளவு, பூண்டு 200 கிராம், மிளகாய் 3 நீளமாக வெட்டியது, எண்ணெய் 2 தேக்கரண்டி, வற்றல் 4, மல்லி 1 தேக்கரண்டி, சீரகம் 3 தேக்கரண்டி, வறுத்து அரைக்கவும், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம்.
செய்முறை பூண்டை உரித்து வைக்கவும், வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும், பின் வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதங்கியவுடன் புளிக்கரைசல்,பூண்டு, சேர்த்துக் குழம்பை வேகவிடவும். வெந்தவுடன் எண்ணெய் தெளிந்தபின் இறக்கவும். புளி குறைவாக போட வேண்டும்.
சுண்டைக்காய் ,மணத்தக்காளி குழம்பு வெந்தயக்குழம்பு மாதிரியே தயார் செய்ய வேண்டும். குழம்பு தாளிதம் செய்யும்போது எண்ணெயில் சுண்ட வற்றலை அல்லது மணத்தக்காளியை பொரித்துக் கொண்டு புளி கலந்த மசாலாவை சேர்க்க வேண்டும்.
0
Leave a Reply