வெந்தயக் கீரை பராத்தா
தேவையானவை - சுத்தம் செய்த வெந்தயக்கீரை - 2 கப், கோதுமை மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் தேவைக்கு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை: -வாயகன்றபாத்திரத்தில் கோதுமை மாவு, வெந்தயக்கீரை, மிளகாயத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துச் சிறிது சிறிதாகத் தண்ணீவிட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.பிறகு அந்தமாவிலிருந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டையாக எடுத்துச் சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு எண்ணெய்விட்டு வேகவைக்கவும். சுவையான, சத்தான வெந்தயக்கீரை பராத்தா ரெடி. கெட்டித் தயிர் அல்லது தயிர்ப்பச்சடியைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால்,சுவை அள்ளும்.
0
Leave a Reply