‘பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன்11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசியாவின் பலம் வாய்ந்த ஈரான் ('நம்பர்-20') 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
நியூசிலாந்து (ஜூன் 15), பெல்ஜியம் (21), எகிப்துடன் (26), கடந்த 8 தொடரில் 6வது முறையாக பங்கேற்கும் ஈரான் அணி மோத உள்ளது. இப்போட்டிகள் அமெரிக்காவில்நடக்க உள்ளன.
ஈரான் அணி உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது. அமெரிக்காவில் நடக்கும் தொடரில் பங்கேற்க ஈரான் அணியை வரவேற்கிறோம், எப்போதும் இல்லாத வகையில் மக்களை ஒன்றிணைக்க 'பிபா' உலக கோப்பை போன்ற நிகழ்வு நமக்குத் தேவை,என டிரம்ப் கூறினார்.
0
Leave a Reply