தீ விபத்து
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
தீ விபத்தில் காயமுற்றோருக்கு உரிய முதலுதவி செய்த பின்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
உடைகளில் தீ பிடித்தால் தரையில் படுத்து,உருண்டு, தீயினை அணைக்க வேண்டும்.
தீ விபத்து ஏற்படும்போது கூச்சலிட்டோ, விசில் அடித்தோ, சுவர்களில் தட்டியோ அனைவரையும் எச்சரிக்க வேண்டும்.
தீ விபத்தின் போது மின்சாரம், சமையல் எரிவாயு கலன் ஆகியவற்றின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
கட்டடத்தில் இருந்து தப்பிக்கும் போது தரையில் குனிந்தபடி தப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் புகையினைச் சுவாசித்து உயிரிழக்க நேரிடும்.
வீடுகள் , பள்ளி , அலுவலகங்களில் தீயை அணைப்பதற்கான உபகரணங்களை பொருத்தி பாதுகாக்க வேண்டும்.
0
Leave a Reply