இந்தியாவுக்கு உலக 'யூத்' குத்துச்சண்டையில் ஐந்து பதக்கங்கள்.
உலக குத் துச்சண்டை 'பியூட்சர்ஸ்' கோப்பை (19 வயது) தொடர் தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில், பெண்களுக்கான 51 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின்சந்திரிகா பூஜாரி, உஸ்பெகிஸ்தானின் நஜோகத் மர்டோனோவா மோதி,.இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை வென்றார்.
இந்திய வீராங்கனை குஞ்சன், இங்கிலாந்தின் லில்லி பாசெட்மற்றொரு பைனலில் (48 கிலோ) மோதி,குஞ்சன் 0-4 என தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
இந்தியாவின் ஜாய்ஸ்ரீ தேவி சிரோம், அமெரிக் காவின் ரூயிஸ் பெண்களுக்கான 54 கிலோ பிரிவு பைனலில், மோதி, ஜாய்ஸ்ரீ 1-4 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை ராதாமணி லாங்ஜம் வெண்கலம் வென்றிருந்தார்.
இந்தியாவின் அம்பேகர், உஸ்பெகிஸ்தானின் அப்துகனி யார்கின்ஜோனோவ் ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் மோதி,.அம்பேகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இந்தியாவுக்கு இத்தொடரில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 5 பதக்கம்கிடைத்தது.
0
Leave a Reply