25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


கொள்ளுப் பாட்டி முதல் பேத்தி வரை நான்கு தலைமுறை. ஹீரோயின்ஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொள்ளுப் பாட்டி முதல் பேத்தி வரை நான்கு தலைமுறை. ஹீரோயின்ஸ்

குமாரி ருக்மணி முப்பதுகளின் இறுதி முதல் எழுபதுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவில் நடித்தவர்.குமாரி ருக்மணியின் தாய் ஜானகியும் நடிகைதான். பூர்வீகம் தஞ்சாவூர். ருக்மணியின் சின்ன வயதிலேயே அவர்கள் சென்னைக்கு குடியேறியிருந்தனர். ஹரிச்சந்திரா படத்தில்- பால்யகால லோகிதாசனாக   அறிமுகப்படுத்தினர் 

பிறகு சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம், ரிஷ்யசிருங்கர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் ஏவிஎம்மின் ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். 1946 இல் ஒய்.வி ராவ் தயாரித்து, இயக்கி, நடித்த படத்தில் ருக்மணி அவரது ஜோடியாக நடித்தார். திருமணத்துக்குப் பிறகும் ருக்மணி தொடர்ந்து நடித்தார். 

எம்ஜிஆரின் தலைவன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மணிவண்ணனின் அம்மாவாக சின்ன வேடத்தில் தோன்றியிருப்பார். ருக்மணி, ஒய்.வி.ராவின் மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. அம்மாவை விட  சினிமாவில் பேரும் புகழும் மகளுக்கு கிடைத்தன. சவாலான வேடங்களில் நடித்தார்.   அவரதுபாட்டி ஜானகியும் ஒரு நடிகை.அந்த வகையில் லட்சுமி அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகை. லட்சுமியின்'மகள் ஐஸ்வர்யாவும் நடிகை. அவர் நான்காவது தலைமுறை. அம்மா லட்சுமி, பாட்டி ருக்மணியின் அர்ப்பணிப்பு ஐஸ்வர்யாவிடம் இருந்திருந்தால் இன்னும் மேம்பட்ட நடிகையாக அறியப்பட்டிருப்பார். நான்கு தலைமுறை கலைக்குடும்பம், 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News