25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பிரெஷ் & க்ரீமி மஷ்ரூம் குழம்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஷ் & க்ரீமி மஷ்ரூம் குழம்பு .

தேவையான பொருட்கள்: 

மஷ்ரூம் -250 கிராம், பாதாம் -5, தேங்காய் -1-1 மேஜைக்கரண்டி, இஞ்சி - 1 சிறு துண்டு, பூண்டு -10 பல், தனியா - 1 ஸ்பூன், சீரகம் - தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 ஸ்பூன், பச்சை மிளகாய் -3, பெரிய வெங்காயம் 1, தக்காளி -1, மஞ்சள்தூள் 1 ஸ்பூன், தயிர் -1/2 கப், நெய் - 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி அலங்கரிக்க.

செய்முறை-

கடாயில் நெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெந்தயம், தனியா, தக்காளி, பச்சை மிளகாய், தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியபின் மைய அரைத்துக்கொள்ளவும்.

மீண்டும் கடாயில் நெய் ஊற்றி சீரகம்,1/2 வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி, அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கொதிக்கும் மசாலாவில் மஷ்ரூம் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து1 கப் அளவு தண்ணீர் விட்டு5-10 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பிரியும்போது தயிரை சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News