பிரெட் கட்லெட்
தேவையானவை -
குடமிளகாய்-1, கோதுமை பிரெட் ஸ்லைஸ்-6, வெங்காயம்-1, தக்காளி-1, மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன் , சீரகத்தூள்-1 டீஸ்பூன், சோம்புத்தூள்-1 டீஸ்பூன், எண்ணெய்- தேவையானஅளவு, உப்பு- சுவைக்கேற்ப.
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் ஒரு நறுக்கிய வெங்காயம், ஒரு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பிறகு இதில் நறுக்கிய ஒரு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் நன்கு வதங்கியவுடன், வேக வைத்து மசித்த 2 உருளைக்கிழங்கையும் அதில் சேர்த்துக் கிளறி எடுக்கவும். இந்த மசாலா கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும்.
"ஓரங்களை நீக்கிய கோதுமை பிரெட் ஸ்லைஸ்6 எடுத்துக்கொள்ளவும். அவற்றைக் தண்ணீரில் நனைத்து, பிழிந்து எடுக்கவும்.பின்னர் ஒவ்வொரு பிரெட் உருண்டைக்குள்ளும்ஒரு மசாலா உருண்டையை நடுவில் வைத்து சிறிய பந்தாகஉருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருட்டி வைத்திருக்கும் பிரெட் பந்துகளை பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் கட்லெட் தயார்.
0
Leave a Reply