விளையாட்டு போட்டிகள்.MARCH 28TH
கால்பந்து
கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் லீக் (ஐ.டபிள்யு. எல்.,) சேது எப்.சி., அணி 3-1 என, ஒடிசா அணியை வீழ்த்தியது.அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் பெண்கள் லீக் 8வது சீசனில் ,மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னை யில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சேது எப்.சி., அணிகள் மோதின. சேது எப்.சி., அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குத்து சண்டை,
பெண்களுக்கான தேசிய சீனியர் குத்துச்சண்டை 8வது சீசன் சாம்பியன்ஷிப் உ.பி.,யின் நொய்டாவில். மொத்தம் 188 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 'மினிமம் வெயிட்' (45-48 கிலோ) பிரிவின் நடப்பு சாம்பியன் அகில இந்திய போலீஸ் அணியின் மீனாட்சி தனது மூன்றாவது போட்டியில், டில்லியின் சஞ்சனாவை வென்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் சிக்கிமின் யாஷிகாவை சந்திக்க உள்ளார். பிளை வெயிட்' (48-51 கிலோ) பிரிவில் ரயில்வே அணியின் அனாமிகா, தமிழகத்தின் கலைவாணியை சந்தித்தார். கடும் போராட்டத்துக்குப் பின் அனாமிகா 4:3 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார். இதில் ஹரியானாவின் தமன்னாவை சந்திக்கிறார்.
மல்யுத்தம்
ஜோர்டானில் ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப்,. இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ் டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என மொத்தம் 30 பேர் பங் கேற்கின்றனர். பெண் களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. நேற்று
76 கிலோ பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் ரீத்திகா, 10-0 என ஜப்பானின் யமா மோட்டோவை வென்று, பைனலுக்கு முன்னேறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி.
"கேலோ இந்தியா பாரா' விளையாட்டு டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான 2வது சீசனில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்,6 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
கடைசி நாளில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் குஜராத் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். நான்கு தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என, 21 பதக்கங்களை கைப்பற்றினர். ஹரியானாவுக்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கம் கிடைத்தது.
முடிவில், 34 தங்கம், 39 வெள்ளி, 31 வெண்கலம் உட்பட 104 பதக்கங்களை அள்ளிய ஹரியானா, மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தமிழகம் 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் உட்பட 74 பதக்கங் களுடன் 2வது இடத்தை தட்டிச் சென்றது.
உ.பி., க்கு (23 தங்கம், 21 வெள்ளி, 20 வெண்கலம்) 3வது இடம் கிடைத்தது.
0
Leave a Reply