பூண்டு சூப்
தேவையான பொருட்கள் - பூண்டு 8 பற்கள், ரொட்டி 8 துண்டுகள், எண்ணெய் 4 மேஜை கரண்டி, மிளகுத்தூள் 2 சிட்டிகை, பால் 50 மி .லி , வெண்ணெய் 10 கிராம், உப்பு 1 தேக்கரண்டி, தண்ணீர் 500 மில்லி லிட்டர்.
செய்முறை - ரொட்டியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பேக்கிங் ஓவெனில் வைக்கவும். வெண்ணையில் பூண்டு வறுத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூளைச் சேர்த்து உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும். தண்ணீரைக் கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும். ரொட்டித்துண்டுகளில் மேல் கொதிக்க வைத்த தண்ணீரை விட்டு 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். பூண்டுத் துண்டுகளை எடுத்துவிட்டு அத்துடன் பாலைச் சேர்த்துக் கொள்ளவும். சூப்பை 10 நிமிடங்கள் வரை சூடான பேக்கிங் ஓவெனில் வைத்துபரிமாறவும்.
0
Leave a Reply