25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்சார்ந்தவர்களுக்குஜெர்மன் மொழி  தேர்வுக்கானபயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்சார்ந்தவர்களுக்குஜெர்மன் மொழி தேர்வுக்கானபயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலானபயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழித் தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training)அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சினைபெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்றும் பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing),பொதுநர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (GNM Diploma), பி.இ(மெக்கானிக்கல்இன்ஜினியரிங்), பி.இ (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (மின் மற்றும் மின்னணுபொறியியல் (EEE)) & பி.டெக்.தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT)ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும்வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00லட்சத்திற்குள் இருக்கவேண்டும். 

இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பதுமாதமும் விடுதியில்தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சிமுடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில்பணிபுரியவும்ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/-வரைவருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.இப்பயிற்சியில்சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளமுகவரியில்பதிவு செய்ய வேண்டும். தகுதியுடையவிண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News