இஞ்சி தொக்கு. (Ginger Thokku)
தேவையானவை :
இஞ்சி -1/4கிலோ
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
பச்சை மிளகாய்-50 கிராம்
புளி - 100 கிராம்
வெல்லம் - சிறு துண்டு
தாளிக்க தேவையானவை :
கடுகு -1ஸ்பூன்,வெந்தயம் -1 ஸ்பூன், எண்ணெய் - 3 ஸ்பூன், பெருங்காயம் - 1 ஸ்பூன்
செய்முறை;
நான்கு கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயைக் கறிக் கொள்ளவும் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் புளி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் வாணலியில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் இதில் அரைத்து விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
0
Leave a Reply