25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பட்டுப்புழுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பசை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பட்டுப்புழுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பசை.

ஸ்பைடர்மேன் கதாநாயகனான ஸ்பைடர் மேன் தன்னுடைய கைகளில் இருந்து ஒரு விதமான பசையை உருவாக்குவார். அதைக் கொண்டு தன்னுடைய மொத்த உடலையும் இழுத்து, ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பறந்து சென்று மக்களைக் காப்பாற்றுவார்.

அவர் கையில் இருக்கின்ற பசை அந்தஅளவு உறுதியானதாக இருக்கும். அப்படியான ஒன்றைத்தான் விஞ்ஞானிகள் உருவாக்கி இருக் கிறார்கள்.ஆனால் அவர்கள் சிலந்தியின் வலையைப் பயன்படுத்தவில்லை. மாறாக அதைவிட மிகச்சுலபமாக கிடைக்கின்ற பட்டுப்புழுக்களின் பசையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்

பட்டுப்புழுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பசையில் சிலவிதமான வேதிப்பொருட்களை கலந்து பரிசோதித்தனர்.ஒரு சிறிய ஊசியின் வழியே இந்தப்  பசையை செலுத்தினால் ஆரம்பத்தில் இது திரவமாக இருக்கும். மிகக்குறுகிய நேரத்தில் கெட்டியாக மாறிவிடும். மாறிய பிறகு இந்தப் பசை நூலின் எடையை விட 80 மடங்கு அதிக எடை உள்ள பொருளைச் சுமக்கும் அளவு பலம் பெற்று விடும்.

இந்தப் புதிய கண்டு பிடிப்பு அறிவியல் ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை தசை பொறியியல். ஒட்டும் திரவங்களின் தயாரிப்பு முதலியவற்றில் பயன்படுத்த முடி யும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News