25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலக ஜீனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு  தங்கப்பதக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக ஜீனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

பெருவில் உலக ஜீனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் திவான்ஷி, 577.19 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். பைனலில் அசத்திய இவர், 35 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஆண்களுக்கான தனிநபர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு பைனலில் இந்தியாவின் முகேஷ் நெலவல்லி. 555 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் சூரஜ் சர்மா 583 புள்ளி வெள்ளி வென்றார். இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெள்ளிப்பதக்கம் ஆனது.ஆண்கள் அணிகளுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் முகேஷ் (585) சூரஜ் (583) பிரத்யும்ன் சிங்(561) அடங்கிய இந்திய அணி 1726 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News