25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டி

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் (24.05.2025) மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி, உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிக் கனவு என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்யும் வகையிலும், உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வலியுறுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் எதிர்காலத்திற்கான உறுதுணையாகவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 12 கி.மீ தூரப்போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசரத் என்பவருக்குமுதல் பரிசு ரூ.20,000/- மும், இராஜபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000/- மும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கு மூன்றாம் பரிசு ரூ.10,000/- மும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு நான்காம் பரிசு ரூ.7000/- மும், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருக்கு ஐந்தாம் பரிசு ரூ.5,000/மும்,பெண்களுக்கான 10 கி.மீ. தூரப்போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கு முதல் பரிசு ரூ.20,000/- மும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வனிதா என்பவருக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000/- மும், விருதுநகரைச் சேர்ந்த கௌசிகா என்பவருக்கு மூன்றாம் பரிசு ரூ.10,000/- மும், தூத்துக்குடியை சேர்ந்த கனகலட்சுமி என்பவருக்கு நான்காம் பரிசு ரூ.7000/- மும், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கு ஐந்தாம் பரிசு ரூ.5,000/மும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இப்போட்டியில் தமிழக முழுவதிலிருந்து ஏராளமானவர்கள் ஆர்வமுடன பங்கேற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News