பசுமை விகடன் மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து `மரப்பயிரும் பணப்பயிரே!' என்ற ஒரு நாள் கருத்தரங்கு
மரப்பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், பசுமை விகடன் மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து `மரப்பயிரும் பணப்பயிரே!' என்ற ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
சூழலுக்கும் வணிகத்துக்கும் மரங்கள் மனிதனுக்கு தரும் பலன்கள் மிக அதிகம். பென்சில் தயாரிபில் இருந்து வீடு கட்ட, வேளாண் கருவி, பர்னிச்சர்கள் செய்ய, கப்பல் கட்டுவது வரை மரங்களின் அத்தியாவசிய தேவைகள் மிகவும் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் மரங்கள் தேவைக்கு டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். எனவே, மரங்களை வளர்ப்பது வணிக ரீதியாக நல்ல லாபத்தைக் கொடுக்கும். மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, அதில் லாபம் பெறுவது எப்படி என்று வழிகாட்டுகிறது பசுமை விகடன்.
உணவுப் பயிர் விளைவிப்பது மட்டுமே விவசாயத்தின் குறிக்கோள் என்பதைத் தாண்டி, விவசாயம் லாபம் கிடைக்கும் தொழிலாகவும் விளங்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை ஆர்வத்துடன் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். எனவே, மரப்பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், பசுமை விகடன் மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து `மரப்பயிரும் பணப்பயிரே!' என்ற ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
இவ்விழாவுக்கு மாமல்லபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn PHF B. மகேஷ் குமார் தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆளுநர் Rtn P.பரணிதரன் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn.pdg A. சம்பத்குமார் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் ரோட்டரி மாவட்டம் 3231-ன் மிகச் சிறந்த ரோட்டரி ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
TNPL வனத்தோட்ட துறை உதவி பொது மேலாளர் ரவி, ``தனியார், அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான, சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களைக் கண்டறிந்து, அந்நிலங்களை மேம்படுத்திக் கூழ்மர சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம். இதன் மூலம் தரிசு நிலங்கள் பயனுள்ளதாக மாற்றப்படுவதுடன் மண் அரிப்பும் தடுக்கப்பட்டு மண் வளமும் மேம்படுத்தப்படுகிறது. பெரு, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களிலிருந்து நிலையான வருவாய் பெறும் பொருட்டு TNPL வனத்தோட்ட துறையானது இரண்டு வகையான வனத்தோட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது..." இதுகுறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக உரையாற்ற உள்ளார்.
.இன்று பூச்சிக்கொல்லி வாங்கித் தெளித்து பூச்சிகளுடன் சேர்த்து நம்மையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். புயல் வந்தால்தான் மழை வரும் என்று நினைக்கிறோம். இந்தத் தேதியில் மழை என்று சொன்னால், அன்று மழை பெய்யும். ஆனால் இன்று பருவநிலை மாற்றத்தால் பருவமழை தவறிப் பெய்கிறது. அதற்கேற்றாற்போல் விவசாயிகள் பருவமாற்றத்தை உணர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். இதில் மரப்பயிர்களின் பங்களிப்பு முக்கியமானது'' என்று கருத்துரை வழங்க உள்ளார். மேலும், மர சாகுபடியில் லாபம் பெற்ற விவசாயிகள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
உரை விருந்துக்குப் பிறகு மதிய உணவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவு செய்வது முக்கியமானது.
நாள்: 16.9.23, சனிக்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம்: பகவான் பண்ணை, நடுவக்கரை கிராமம் பட்டரைக்கழனி அஞ்சல், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.
(திருக்கழுக்குன்றத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் பண்ணை உள்ளது. பேருந்து, ஷேர் ஆட்டோ வசதிகள் உண்டு.)
உங்கள் பெயர், முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு...
பசுமை விகடன், செல்போன்: 99400 22128.
Rtn PHF B. மகேஷ் குமார், செல்போன்: 94426 14278.
0
Leave a Reply