வேர்க்கடலை சாதப் பொடி.
தேவையான பொருட்கள் :- வறுத்த வேர்க்கடலை 1 கப், வெள்ளை எள் கால் கப், வத்தல் 6 முதல் 7 எண்ணம், பெருங்காயம் 2 இஞ்ச் துண்டு, உப்பு தேவையான அளவுகருவேப்பிலை சிறிதளவு.
செய்முறை :- வறுத்த வேர்க்கடலையை சூடு பொறுக்கும் வரை வறுத்து எடுத்து கசக்கி தோலைநீக்கவும், வெள்ளை எள் வெடித்து வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும், பெருங்காயத்தை வறுத்து, பின் வத்தல், கருவேப்பிலை தனியாக வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும் கடைசியாக நிலக்கடலை, எள்ளை கொர கொரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும், எல்லாவற்றையும் கலந்து வைக்கவும், உதிரி சாதம் (சூடாக இருக்க வேண்டும்)தேவையான அளவு கடுகு, கருவேப்பிலை, தாளித்து சாதம் சேர்த்து அதன் மேல்வேர்க்கடலை பொடி தேவையான அளவு தூவி கலந்தால் சூப்பர் நிலக்கடலை சாதம் ரெடி, இட்லி தோசைக்கு இப்பொடி நன்றாக இருக்கும்.
0
Leave a Reply