க்ரோ பேக் தொட்டி
மாடி தோட்டங்கள் அமைக்கும் வாடகைகுடியிருப்புக்காரர்கள் அதிக எடை கொண்ட தொட்டியையோ சிமெண்ட் தொட்டிகளையோ பயன்படுத்த வேண்டாம். வீட்டை காலிசெய்யும் போதும் அதை எளிதாக எடுத்து செல்லும் வகையில் அமைக்க திட்டமிடுங்கள். . சொந்த வீடுகள் வைத்திருப்பவர்கள் கூட இதை பயன்படுத்தாமல் குறைந்த எடை உள்ள" க்ரோ பேக்" என்று சொல்ல கூடியவற்றில் செடிகள் வைக்கலாம்.
இதில் மண்ணுக்கு பலம் சேர்க்க எரு, மண்புழு உரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதனோடு தென்னை நார்க்கழிவுகள் கிடைக்கும். இதை பயன்படுத்தும் போது செடிகளுக்கு தேவையான தண்ணீரின் அளவு மிச்சமாகும். அளவுக்கு அதிகமான மழையோ வெயிலோ நேரிடையாக செடிகளை பாதிக்காமல் இருக்க மாடியில் க்ரீன்ஹவுஸ் செட் மட்டும் போட்டு கொள்ளலாம்.
0
Leave a Reply