அரைக்கீரை சூப்
தமிழ் மக்களுக்கு அறிமுகமான கீரை வகைகளில் அரைக்கீரை ஒன்று, அரைக்கீரையில் 87 சதவிகிதம் நீர் உள்ளது. 8 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது மற்றும் 0.4 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், 2.4 சதவிகிதம் தாது உப்புகளும் உள்ளன. 100 கிராம் கீரையில் 364 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தும், 38.5 கிராம் புரதச் சத்தும் உள்ளன.சித்த மருத்துவத்தில் இந்தக் கீரை முக்கியமான ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், ஜன்னி, கபரோகம், வாத நோய்கள் ஆகிய நோய்களைக் குணமாக்கும். தாது விருத்திக்கு இது சிறந்தது.
தேவையான பொருட்கள்-
அரைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடியளவு
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1
கொத்தமல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
தக்காளிப்பழம் (பொடியாக நறுக்கியது) 2
எலுமிச்சம் பழச்சாறு - 2தேக்கரண்டி
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப
பயத்தம் பருப்பு - 50கிராம்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
பூண்டு 2 பற்கள், தண்ணீர் 500 மி. லி
செய்முறை-
தண்ணீர் விட்டு பயத்தம்பருப்பைக் குழைய வேக வைத்து சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ள வேண்டும் வெங்காயத்தையும் பூண்டும் நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். அதில் சீரகப்பொடி, கொத்தமல்லிப் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப்பழம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எலுமிச்சம்பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும்.நன்கு வதக்கிய வெங்காயம். எலுமிச்சம் பழத்துண்டுகளோடு பரிமாறலாம்.
0
Leave a Reply