கை நிறைய காசை விட கை நிறைய தவணை
'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' வரவு அறிந்து செலவு செய்தல், குடும்ப வரவை பட்ஜெட் போட்டு பிரித்து செலவு செய்தல், போன்றவை தற்பொழுது உருவாகியிருக்கும், ஹைடெக் இளம் தலைமுறையினருக்கு, காதுல பூ சுற்றுவது போல் அலட்சியப்படுத்துகின்றனர்.காரணம் சம்பளம் முழுவதையும் பாக்கெட் மணியாக உபயோகிக்கின்றனர். இளம் தலைமுறையினருக்கு கண்டிப்பாக சம்பாதித்து விடமுடியும், என்கின்ற தைரியமான நம்பிக்கைதான். தான் எடுத்த தொழிலையும், இன்டர்நெட்டின் நண்பனாகவும் இருப்பதால், எதையும் சாதித்துவிடலாம், என்ற அசாத்திய நம்பிக்கையுடன், தாராளமாக பயமில்லாமல், செலவு செய்கின்றனர்.தரமான பொருட்களை வாங்குவதில் கடையில் சென்று ஷாப்பிங் செய்வதிலும், அட்டகாசமான ஆர்வத்தைக்காட்டுகின்றனர் .நுகர்பொருட்களின் விலையைப் பார்ப்பதில்லை. மாதத்தவணை எவ்வளவு? என்பதையே பார்க்கின்றனர். விலையயைப் பார்ப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. கைக்கு கிடைச்சது வாய்க்கு கிடைக்கலையே, என்று ஏக்கப்பெருமூச்சு விடாமல், சட்டென்று வாங்கிவிடுகின்றனர்.போதாக்குறைக்கு ஆன்லைன் ஷாப்பிங், நிறையவே கெடுத்திருக்கிறது, தற்கால இளைஞர், இளைஞிகளை! பயங்கரமாக நினைத்ததை எல்லாம் உட்கார்ந்திருக்கும், இடத்திலிருந்தே பொருட்களை அள்ளி வாங்குகின்றனர். கிரெடிட் கார்ட், போன்பே, பேயூ என்ற அடுக்கிக் கொண்டே போகின்றனர். விற்பனையாளர்கள் கார்டில் ரூபாய் இல்லையா ? பே ஆன் டெலிவரி, வந்து கூட பொருட்களை கொடுத்துவிட்டு, தொகையை வாங்கி கொள்கின்றனர், இவற்றில் மாதத் தவணையும் உண்டு.' பிள்ளைங்க கெட்டுபோய் விடுவார்கள்' என்று 60 பதுகளைத் தாண்டிய நாம் நினைக்கிறாேம். ஆனால் அந்த பசங்களோ, ‘என்ஜாய் லைப்’ என்று போயிட்டே இருக்காங்க, முடிவு தெரியவில்லையே!.இந்தமாதிரி பயங்கரமான சூதாட்டத்தை, கொஞ்சம் கூட கவலலைப்படாமல், ஹாயாகச் செய்கின்றனர். இந்த சூதாட்டத்தில் ஜெயிப்பவர்கள் ஒரு குழுவினர். தோற்றுவிடுபவர்கள் ஒரு குழுவினர்.தலையெழுத்து இருக்கிறதே, அது மாத்திரம் எக்காலத்திலும் ,மாறாது போலிருக்கிறது. 1953களில் பிறந்தவர்கள் இதை எப்படி விட்டுக்கொடுப்பதா? தெரியாமல் முழிக்கின்றனர். 1920, 30களில் பிறந்தவர்கள் வம்சா வழியாகச் சேர்த்து வைத்த, பூர்வீகச் சொத்து தன் காலத்திற்குப் பின் பேரன், பேத்திகள் தன்பெயரைச் சொல்வதற்கு வைத்திருப்பார்களா, விற்று விடுவார்களா? என்று பதைபதைக்கின்றனர். இதை மறைக்க ‘காலம் கெட்டுப் போச்சி’ என்கின்றனர். தான் கண்ட கனவுகளையெல்லாம் அடக்கி வைத்து, குருவிபோல கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்தவைகளுக்கெல்லாம் ,அதோ கதியா, அதே கதியா? என்று ஆதங்கப்படுகின்றனர்.இதிலிருந்து என்ன தெரிகிறது? பெருமூச்சு விடுபவர்கள் மனசெல்லாம் படபடப்புடன், வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர் .ஹைடெக் இளைஞர்கள் மனதில், எதுவுமே இல்லாமல், ஜில்லென்று ஷாப்பிங் செய்து கொண்டிருக்கின்றனர். முதிய சமுதாயத்தினரின் படபடப்பைப் பார்த்து பரிதாப்படுகின்றர். ஏன் அநாவசியமாக டென்ஷன் ஆகிறீர்கள்? என்று கேலியாக சிரிக்கின்றனர். இதற்கு என்ன முடிவு சொல்வது? யாருக்குமே தெரியாது. நம்மைப் படைத்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். விரலுக்கு தக்க வீக்கமா, வீக்கத்திற்கு தக்க விரலா? விரலில்வீக்கமா? ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் , போதும் சரியாகப் போய்விடுமாம்.கூலாகச் சொல்கின்றனர் இளைய சமுதாயத்தினர். கைநிறைய காசைவிட ,கைநிறைய தவணையுடன் வாழப்போகும் ,இளம் தலைமுறையினர் எங்கே செல்கின்றனர் புரியவில்லை
0
Leave a Reply