ஆழ்ந்த தூக்கம் தரும் மருதாணியின் மலர்கள்
நரம்புகளின் செயல்பாட்டை தூண்டக்கூடியது மருதாணி இலைகள். நம்முடைய உடலிலுள்ள அனைத்து நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்திருக்கின்றன. அதனால்தான், உள்ளங்கையில் மருதாணி வைக்கப்படுகிறது. இதனால், உடம்பின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராகின்றன.. உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் வலுவாகின்றன..சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும் என்பதால், காலில் சரியான ரத்த ஓட்டமும் இருக்காது. அத்துடன், பாதங்களில் ஒருவித எரிச்சலும், குடைச்சலும் ஏற்படும்.. இதற்கும் தீர்வு தருகிறது மருதாணி. கை மற்றும் கால் விரல்களிலும், பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் இந்த இலையை அரைத்து தடவும்போது, ரத்த ஓட்டம் சீராகின்றன..
உடலுள்ள பித்தத்தை மொத்தமாக நீக்கிவிடும் இந்த இலைகள். பித்தம் அதிகமானால் மனநிலை சிதறல், மனநோய் போன்றவை ஏற்படாமல் இந்த இலைகள் தடுத்துவிடும்.. ரத்தமும் சுத்திகரிப்பாகும். மருதாணி இலைகளை, வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிப்பாகும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும்.. மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து கால் வெடிப்புகளில் தேய்த்து வரலாம். நரை முடியை மறைப்பதற்கு மருதாணிபேக் போட்டு குளிக்கலாம்.கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கிருமிகள், நச்சுக்கள் நம்முடைய உடலில் இருக்கலாம். அத்தனையையும் இந்த மருதாணி இலைகள் விரட்டிவிடும். அதனால்தான், நகசுத்தி வந்தால், இந்த மருதாணியை அரைத்து விரலுக்கு வைப்பார்கள்.. சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணி இதுபோன்ற பிரச்சனைகளுக்கும், மருதாணியுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டி வைப்பார்கள்.
மருதாணி இலைகளை போலவே, மருதாணியின் மலர்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை..உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. நிம்மதியானதூக்கம் வராமல் போனால், இந்த பூக்களை, ஒரு வெள்ளை துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்து படுத்து கொண்டால், ஆழ்ந்த தூக்கம் வருமாம்.மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு ஏற்படுத்தக்கூடியது இந்த இலைகள்.. மருதாணியின் வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குணமாகும். மருதாணி விதையில் உள்ள எண்ணெய்யை உடம்பின் மீது தடவி வந்தால், உடலில் எரிச்சல் தணிந்து விடும்.. மருதாணி இலை குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், இதனுடன் நான்கைந்து நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.
0
Leave a Reply