25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்  HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்

நான் முதல்வன்' திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்  HCL Tech  நிறுவனத்துடன் இணைந்து HCL Tech bee  பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி தேர்வு முகாம் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும், விருதுநகர் தங்கம்மாள்பெரியசாமி நாடார் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கும் 09.08.2024 மற்றும் 10.08.2024 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டமானது 1.03.2022 அன்று துவக்கிவைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது ஈராண்டினை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.இத்திட்டமானது மாணவர்கள் சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.2023 அல்லது 2024- கல்வியாண்டில் 12-ம் வகுப்பு கலைபாடப் பிரிவு (கணிதம் மற்றும் வணிகக் கணிதம் இல்லாத) பொதுத்தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி வழங்கப்படுகிறது.

வெற்றிகரமாக ஒரு வருடகால பயிற்சியினை முடிப்பவர்களுக்கு HCL Tech-ல் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அவர்களின் மேற்படிப்பை தொடங்குவதற்கு வாய்ப்பினை தருகின்றது. ஒரு வருடகால பயிற்சியின் போது ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.10,000 வழங்கப்படுகின்றது.பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் வரை கிடைக்க வழிவகையுள்ளது. எச்.சி.எல் டெச்சில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் தொடங்குவதற்கு அமிட்டி, கே.எல்.பல்கலைக்கழகம் மற்றும் சாஸ்திரா உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள் வாய்ப்பினை தருகிறது. மேலும், அவர்களின் கல்விக்கட்டணத்தில் ஒரு பகுதியை நிறுவனம் வழங்குகிறது.

2023 அல்லது 2024 ம் கல்வியாண்டில் 12- வகுப்பு கலை பாடப் பிரிவு மாணவர்கள் பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வர்த்தகம் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம். அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் ரூ.51 ஆயிரம் பயிற்சிக்கட்டணம் தமிழ்நாடு அரசுத் திறன் மேம்பாட்டுக் கழகம்; வழங்கும்.இத்தேர்வு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https:// registrations.hcltechbee.com/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 63829-98925, 99446-70684 உள்ளிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News