25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அசாம் காட்டுமுயல் என்று அழைக்கப்படும் ஹிஸ்பிட் முயல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அசாம் காட்டுமுயல் என்று அழைக்கப்படும் ஹிஸ்பிட் முயல்.

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதி புல்வெளிகளில் வாழும் அரிய வகை உயிரினம் ஹிஸ்பிட் முயல். இது, அசாம் காட்டுமுயல் என்றும் அழைக்கப்படுகிறது. தனித்துவமானதோற்றத்துடன் காணப்படும். மெதுவாக ஓடும்; ஆனால் எளிதாக மறைந்து கொள்ளும். கரடுமுரடான ரோமங்கள், இயற்கையாக மறைந்து கொள்ள உதவும்.

உடல் மஞ்சள், பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். நீண்ட காதுகள், குறுகிய வால், பெரிய பற்கள், இதன் அடையாளம். இது, 50 செ.மீ., வரை வளரும். வளர்ந்த முயலின் எடை2.5 கிலோ வரை இருக்கும். உயரமான புல்வெளி, சதுப்பு நிலம், ஆற்றங்கரைகளில் வாழும்.அசாம்,மேற்குவங்கம்,உத்தரப்பிர பிரதேசம்,அருணாச்சலபிரதேசம்,மணிப்பூர்மாநிலங்களில்காணப்படுகிறது.

ஒரு காலத்தில் நேபாளம், வங்கதேசம், பூடான் வரை பரவியிருந்தது. இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது. உலக அளவில் மிக அரிதான முயல் இனங்களில் ஒன்றாக வகைபடுத்தப்பட்டு உள்ளது.

இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும்.புல், இலை, தளைகளை உணவாக உட்கொள்ளும். தனித்து புல்வெளிகளில் மறைந்து வாழும் பண்புள்ளது.ஆண்டுக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். வேட்டை, வாழிட இழப்பு, விவசாய நில விரிவாக்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளகியுள்ளது.இந்த விலங்கினத்தை பாதுகாக்க சிறப்பு பூங்காக்களில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News