ஹாக்கி இந்தியா லீக் போட்டி.
பெங்கால் அணி 3-1 என, சூர்மா கிளப் அணியை ,ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 7வது சீசன் சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், நடக் கிறது. நேற்று சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சூர்மா கிளப், ‘நடப்பு சாம்பியன்' பெங்கால் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில், நேற்று நடந்த லீக் போட்டியில் ராஞ்சி, பெங்கால் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply