குதிரைவாலி பாயாசம்.
தேவையான பொருட்கள் - 100 கிராம் குதிரைவாலி அரிசி ,1/2 கப் மில்க்மெய்ட் ,2 லிட்டர் பால் , தேவையானஅளவு சர்க்கரை
தாளிக்க - 3 மேஜைக்கரண்டி நெய் ,2 மேஜைக் கரண்டி முந்திரி , 2 மேஜைக்கரண்டி பாதாம்
செய்முறை- ஒரு அடிகனமான பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியைக் கழுவி சேர்க்கவும். இதோடு காய வைத்த பாலை சேர்த்து அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் அரிசி வேகும் வரை கிளறிக்கொண்டே வேக வைக்கவும்.
அரிசி வெந்தபின் தேவைப்படும் அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்த பின் மில்க் மெய்டு சேர்த்து கலக்கவும்.
தாளிக்க நெய் சேர்த்து உருகியதும் நீளமாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலக்கவும்
0
Leave a Reply