வண்ண தீப்பொறி எப்படி ஏற்படும்
மரக்கட்டையால் உருவாக்கப்படும் தீ. சிவப்பு நிறத்தில் எரிந்தாலும், ஆங்காங்கே ஆரஞ்சு நிற தீச் சுடரும் தெரியும். மரத்திலுள்ள சோடியம் எரியும்போது, எழும் நிறமே இது. ஒவ்வொரு வேதிப்பொருளும் வெப்பநிலைக்கு ஏற்ப பல நிறங்களில் ஒளியை உமிழும். அதிக வெப்பநிலையில் சோடியம் ஆரஞ்சு நிற ஒளியை உமிழும். தீபாவளிப் பட்டாசில் வண்ணத் தீப்பொறி வருவதும் இதே போலதான். ஆனால் சமையல் காஸ் அடுப்பு1500 டிகிரி வெப்பநிலையில் எரியும் போது நீல, ஊதா நிற தீப்பிழம்பு ஏற்படும். இதற்கு இதில் உள்ள ஹைட்ரோகார்பன் மூலக்கூறு காரணம்.
0
Leave a Reply