முகேஷ் அம்பானி சம்பாதித்தது தீர்ந்து போக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ,முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ10.21 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது.முகேஷ் அம்பானிஇந்தியாவில் மிகப்பெரிய வணிகராகவேபார்க்கப்படுகிறார். அவர் நாளுக்கு ரூ3 கோடி செலவிடுவதாகஇருந்தால், இதுவரை முகேஷ்அம்பானி சம்பாதித்த சொத்துக்கள்மொத்தம் செலவாவதற்கு932 ஆண்டுகளும்6 மாதங்களும் ஆகும் என்றெ கணக்கிடுகின்றனர்.
அதாவது அவர் சாதாரணமாக நாளுக்கு ரூ3 கோடி செலவிடுவதாக இருந்தால், மொத்தம்340,379 நாட்களில் அவரது மொத்த சொத்துக்களும் செலவிட்டுவிடுவார். ஆனால், முகேஷ் அம்பானியின் வருவாய் நாளும் அதிகரித்துவருவதால், அவரது சொத்துக்கள் தீர்ந்து போக பலநூற்றாண்டுகள் ஆகும் என்பதே நிஜம்.
2024ல்மட்டும் இதுவரை அவர் ரூ1.98 லட்சம் கோடி தொகையை தமது வருவாயாக ஈட்டியுள்ளார். மட்டுமின்றி, மகனின் திருமணத்திற்காக பல கோடிகளை செலவிட்டுள்ளார். அத்துடன், முகேஷ் அம்பானியின் ஒரு நாள் செலவு என்பது ரூ3 கோடியாக இருக்கவும் வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.-
0
Leave a Reply