25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பிரஷர் குக்கர் பயன்படுத்தும் முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரஷர் குக்கர் பயன்படுத்தும் முறை

,.எதிர்பாராதவிதத்தில் வரும் விருந்தாளிகளைச் சமாளிக்கவும்,சமையலறையில் பல மணி நேரம் வியர்வை வடிய சமையல் செய்வதிலிருந்து தப்பிக்கவும் பிரஷர் குக்கர் மிக உதவுகிறது.பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறி என்று மூன்று விதப் பண்டங்களை ஏறக்குறைய ஒரே மணி நேரத்தில் வேக வைக்க முடியும். பல ஆண்டுகள், பிரஷர் குக்கரில் உணவு தயாரித்துப் பழக்கமிருந்தாலும், இல்லத்தலைவியர் பலருக்கு பிரஷர் குக்கரின் சக்தி, திறமை மற்றும் குக்கரைப் பாதுகாப்பது எப்படி என்பது முழுமையாகத் தெரிந்திருப்பதில்லை.குக்கரின் வெளிப்புறத்தை சோப்புக்கலந்த கொதி நீரினால் சுத்தம் செய்து, உடனே உலர வைக்க வேண்டும். குக்கரை நீரில் அமுக்கி வைக்கும்போது, பளபளப்பு மங்கிவிடுகிறது. வாஷிங் சோடா உபயோகித்துச் சுத்தம் செய்யக்கூடாது. குக்கர் மங்கிய நிலையில் இருந்தால், அலுமினியத்தைச் சுத்தம் செய்யக்கூடிய டார்ட்டாரிக் அமிலம் உபயோகித்துச் சுத்தம் செய்யலாம்.சமைக்கும்போது, குக்கருள் ஒரு சிறு துண்டு புளியோ, அல்லது ஒரு துண்டு எலுமிச்சையோ போட்டு வைத்தால், உட்புறம் கறுப்பாக ஆகாமல் பளிச்சென்று இருக்கும். (எலுமிச்சம் தோலை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துப் பயன்படுத்தலாம்..

 

குக்கரைச் சுத்தப்படுத்தியவுடன், நன்றாக உலர்ந்த துணியால் துடைத்து வைக்க வேண்டும். மூடியை மூடிய நிலையில் வைக்க வேண்டாம். பல வீடுகளில், குக்கரை, சமைப்பதற்கு மட்டுமன்றி வேறு பல வேலைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இது தவறு. குக்கருக்குள் வைக்கப்படும் பாத்திரங்களை வேறு எதற்கும் உபயோகிக்கக் கூடாது.குக்கரையும், உள் வைக்கும் பாத்திரங்களையும் குப்புறப் போட்டுச் சுத்தம் செய்யக் கூடாது. குப்புறப் போட்டுச் சுத்தம் செய்யும்போது, விளிம்புகள் தேய்ந்து, பாத்திரங்கள் ஒன்று மீது ஒன்று சரிவரப் பொருந்தாது. பொருந்தாதபோது, இடைவெளி இருக்கும். எனவே ஆவி ஏற்படுவது தடைப்படும். ஆகவே குக்கரையும் பாத்திரங்களையும், வேறு எந்த முறையிலும் பயன்படுத்தக் கூடாது.இரப்பர் வளையம் நெடுநாட்களுக்குப் பயன்பட வேண்டுமானால் குக்கரைத் திறந்தவுடன் வளையத்தை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு விடவும். வாரத்திற்கு ஒருமுறை, ரிஃப்ரிஜிரேட்டரில் உள்ள ஐஸ் தயாரிக்கும் ஷெல்ஃபில் ஒரு மணி நேரத்திற்கு வைத்து எடுக்கவும். குக்கருள் ஏற்படும் ஆவியைச் சீராக்கி குக்கருள் இருக்கும் அழுத்தம் மாறாமல் ஒரே நிலையில் இருக்க உதவுகிறது வெயிட் வால்வு. அளவுக்கதிகமான ஆவி ஏற்படும்போது, ஆட்டோமேடிக்காக, வெயிட் வால்வு, அளவுக்கதிகமான ஆவியை வெளியேற்றி குக்கருள் ஒரே நிலையான அழுத்தம் தொடர்ந்து இருக்கும்படிச் செய்கிறது.

 

பிரஷர் குக்கரில் கேஸ்கட் ரிலீஸ் சிஸ்டம் இருக்கிறது. வெயிட் வால்வில் உணவுத் துண்டுகள் சேர்ந்து அடைத்துக் கொண்டு விடுமேயானால் வெயிட் வால்வு சரிவரச் செயல்பட்டு குக்கருள் ஏற்படும் அதிக ஆவியை வெளியேற்ற முடியாது. கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும்போது, குக்கருள் உள்ள ஆவியின் அழுத்தம் அதிகமாகும்போது, கேஸ்கெட்டின் ஒரு பகுதி சரிந்து அதிகமான ஆவி குக்கருக்குள் போய்விடுகிறது.கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் இல்லாதபோது, உணவுத் துண்டுகள் அடைத்துக்கொண்டு வெயிட் வால்வு செருகப்படும் துவாரமும் அடைபட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு. குக்கருள் ஏற்படும் அதிக ஆவியின் அடிக்கத்தின் காரணமாக வெயிட் தூக்கி அடிக்கப்படும். எனவே, குக்கர் மூடியைச் சுத்தப்படுத்தும்போது, ஒரு சிறிய, மெல்லிய ஊசியை, வெயிட் வால்வு செருகப்படும் துவாரத்தில் நுழைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் இருக்கும்போது கேஸ்கெட் சரிந்து விழுந்துவிடுகிறது. இவ்வாறு கேஸ்கெட் விழுந்துவிடும்போது, குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிக் குளிரச் செய்து, வெயிட் வால்வு ஏன் வேலை செய்யவில்லை என்று கவனிக்க வேண்டும். குக்கர் மூடியின் ஒருபுறத்தில் பொருத்தப்பட்டிருப்பது சேஃப்டி வால்வு. குக்கருக்குள் போதுமான நீர் இல்லாதபோதும், வெயிட் வால்வு அடைத்துக் கொள்ளும்போதும், குக்கருள் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. குக்கருள், பாதுகாப்பான அளவுக்கு மேல் ஆவியின் அழுத்தம் அதிகமானால், இந்த சேஃப்டி வால்வு உருகி, அளவுக்கதிகமான ஆவியை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில குக்கர்களில் இந்த சேஃப்டி வால்வு கைப்பிடிக்கு அடியில் அமைந்திருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News