450 கிராம ஊராட்சிகளில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருந்த ஒத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டம் 23-11-2024 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினமான 01.11.2024 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 23.11.2024 - அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் குறித்து விவாதித்தல்.
கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல் குறித்து விவாதித்தல்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் குறித்து விவாதித்தல்.
தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம் குறித்து விவாதித்தல்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல்.
ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதித்தல்.
கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு குறித்து விவாதித்தல்.
கூட்டாண்மை வாழ்வாதாரம்குறித்து விவாதித்தல்.
இதர பொருட்கள் குறித்து விவாதித்தல்.
எனவே, 23.11.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply