இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக ஆடியது
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னுக்கு சுருண்டது. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180/3 ரன் எடுத்து 134 ரன் முன்னிலை பெற்றிருந்தது.முதல் இன்னிங்சில் 356 ரன் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இரண்டாவது இன்னிங்சில் 231/3 ரன் எடுத்து 125 ரன் பின்தங்கியுள்ளது.
முதல் இனினிங்சில் குறைந்த ஸ்கோருக்கு அவுட்டான எந்த அணியும், அந்த டெஸ்டில் வென்றது. கிடையாது. இதை மாற்ற முயற்சிக்கிறது. இருப்பினும் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி போட்டியில் வெற்றிக்கு முயற்சிக்கும், திட்டத்துடன் ,இந்திய பேட்டர்கள் உள்ளனர். இரண்டாவது இன்னிங்சில் தற்காப்பு முறையில் விளையாடாமல் துவக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியில் அடித்து விளையாடி, வேகமாக ரன் சேர்க்கின்றனர்.
மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 125 ரன் மட்டும் பின்தங்கியுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளன. இன்று நான்காவது நாளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நான்காவது இன்னிங்சில் குறைந்த பட்சம் 100 ரன்னுக்கும் மேல் இலக்கு என்றால் கூட, இம்மைதானத்தில் சேஸ் செய்வது கடினம். விராத்கோலி, தனது 53-வது ரன்னை எடுத்த போது டெஸ்ட் அரங்கில் 9000 ரன் எட்டினார். இம் மைல் கல்லை தொட்ட 4-வது இந்திய வீரர் ஆனார்.
0
Leave a Reply