ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
.14வது சீசன் ஜூனியர்உலகக் கோப்பை ஹாக்கி, சென்னை, மதுரையில் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப் பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
இந்திய அணி பி' பிரிவில்இடம் பெற்றுள்ள ,முதல் இரு போட்டிகளில் சிலி (7-0), ஓமனை (17-0) வென்றது. தனது கடைசி லீக் போட்டியில் நேற்று மதுரையில் நடந்த சுவிட்சர்லாந்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
'டி' பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் அணி, நமீபியாவை எதிர்கொண்டது. ஸ்பெயின் அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மதுரையில் நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி, 10-0 என எகிப்தை வீழ்த்தியது.
மலேசிய அணி 1-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.நெதர்லாந்து அணி 11-0 என ஆஸ்திரியாவை வென்றது.
0
Leave a Reply