செஸ் ஒலிம்பியாட்டில் வரலாறு படைத்த இந்தியா
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், செஸ் ஒலிம்பியாட் 45வது சீசன் நடந்தது. பத்து சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் நீடித்தது. நேற்று நடந்த 11-வது கடைசி சுற்றில் இந்தியா கலோவேனியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் அர்ஜீன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜராத்தி, பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் அர்ஜீன் கலோவேனியாவின் ஜான் கபெல்ஜ் மோதினர். அர்ஜீன் 49வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்த போட்டியில் குகேஷ் கலோவேனியாவின் விளாடிமி பெடோசீவ் மோதினர். குகேஷ் 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்தியாவின் தங்கப்பதக்கம் உறுதியானது.
இந்திய அணிக்கு தமிழகத்தின் பிரக்ஞானந்தா வெற்றி தேடித் தந்தார். விதித் சந்தோஷ், தனது ஆட்டத்தை டிரா செய்தார். முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 11 சுற்றுகளின் முடிவில் 21 புள்ளிகளுடன் (10 வெற்றி ஒரு டிரா) முதலிடத்தை கைப்பற்றிய இந்தியா, முன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.
பெண்கள் பிரிவு 10வது சுற்றில் இந்திய அணி 2.5-1.5 என சீனாவை வென்றது. பத்து சுற்றின் முடிவில் இந்திய அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை கஜகஸ்தாதுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. 11வது சுற்றில் இந்தியா அஜர்பைஜான் மோதின. இதில் இந்திய அணி 3.5 0.5 என வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவில் 11 சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகளுடன் (9 வெற்றி ஒரு டிரா ஒரு தோல்வி) முதலிடத்தை கைப்பற்றிய இந்தியா முதன்முறையாக தங்கம் வென்று சாதித்தது.
0
Leave a Reply