இந்தியாவிற்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் நழுவிய பதக்கங்கள்.
ஒலிம்பிக் டேபிள் டென்னசில் இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வலிமையான சீனாவை சந்தித்தது. முதலில் நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், மாணவ் விகாஷ் ஜோடி சீனாவின் லாங் சுகுன் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 0-3 (2-11, 3-11, 7-11) என தோற்றது.முதல் செட்டை 11-9 என் கைப்பற்றி ஆறுதல் தந்த சரத்கமல், அடுத்தடுத்த செட்டுகளில் (7-11, 5-11) ஏமாற்றினார். முடிவில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மானவ் விகாஷ் 3-0 (9-11, 6-11, 9-11) என்ற கணக்கில் சீன வீரார் சுகுன் வாங்கிடம் வீழ்ந்தார். முடிவில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
பாரிசில் இந்திய நட்சத்திரங்கள் 5 போட்டியில், 4வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கோட்டை விட்டனர்.
துப்பாக்கி சுடுதலில் மனுபாகர் (25 மீட்டர் பில்டல்) அர்ஜீன் (10 மீட்டர் ஏர் ரைபிள்) 4வது இடம் பிடித்தனர்.
வில்வித்தையில் திராஜ். அன்கிதா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வீழ்ந்தது.
லக்சய சென் ஒற்றையர் பாட்மின்டனில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்றார்.
துப்பாக்கிசுடுதல் இரட்டையரில் மகேஷ்வரி, அனன்ஜீத் சிங் ஜோடி 1 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்தது.
ஒலிம்பிக் பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல், 68 கிலோ பிரிவில் இந்தியாவின் நிஷா தாஹியா காலிறுதிக்கு முன்னேறினார். இதில் நிஷா 8-1 என முன்னிலையில் இருந்த போது, வலது கையில் காயம் எற்பட 8-10 என தோற்றார். நேற்று இவரது மணிக்கட்டு பகுதியில் 1கேன் செய்யப்பட்டது. இதையடுத்து போட்டியில் இருந்து விலகினார்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஒட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் கிரண் பஹல் பங்கேற்றார். 5வது பிரிவில் களமிறங்கிய கிரண் பஹல், இலக்கை 52.51 வினாடியில் கடந்து 7வது இடம் பிடிக்க, நேரடியாக அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. நேற்று மற்றொரு வாய்ப்பு தரப்பட்டது. ரெப்பிசேஜ் போட்டியில் களமிறங்கிய கிரர் 52.92 வினாடி நேரத்தில் ஓடி வர 6-வது இடம் தான் கிடைத்தது.
0
Leave a Reply