ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி.
17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 2027-ம் ஆண்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 17 வரை சீனாவில் இந்தத் தொடர் நடைபெற உள்ளது.
இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி ‘ஈ’ பிரிவில் இடம் பெற்றிருந்தது. முதல் போட்டியில் ஈராக் அணியை 14-0 என்ற கோல் கணக்கிலும், அடுத்த போட்டியில் சிரியா அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. கடந்த 2025-ம் ஆண்டு தொடரில் இந்திய அணி காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியது.
0
Leave a Reply